Nadodi Mannan Tamil Film Script

Block buster movie of the year 1958 Emgeeyar Pictures Nadodi Mannan movie script has been published by Kannadasan Pathipagam. The book is released in June 2013.

The book contains 200 pages with full script, lyrics, some informations about the songs and rare images from the movie.

The dialogues are written by Kaviarasu Kannadasan and Ravindran. Some of the breathtaking, mesmerizing classic Tamil dialogues from Nadodi Mannan, uttered by our Puratchi Thalaivar MGR.

 

நாடோடி மன்னனைப் பார்த்து

அப்படித்தான் மக்கள் இதுவரை நம்பி இருந்தார்கள். ஆனால் விதிக்கப்படும் கொடிய வரிகளும் கொடுக்கப்படும் சவுக்கடிகளும் மன்னராகிய நீங்கள் வாழத்தெரிந்தவர்களே தவிர ஆளத் தெரிந்தவர்கள் அல்ல என்பதை நிருபித்து விட்டன….

பாத்திரம் நிறைய பாலைப் பார்த்து பழகிய உங்களுக்கு சாக்கடை நடுவிலே வாழும் மக்கள் நிலை புரியாது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இரண்டாயிரம் ஆடைகளில் எதை அணிவது என்று புரியாது திண்டாடும் நீங்கள் ஏதாவது ஒரு ஆடை இருந்தால் மானத்தை மறைக்கலாமே என்று ஏங்கும் ஏழைகளைப் பற்றி எப்படி அறிந்து கொள்ள முடியும்…

இங்கே சாலையில் பட்டு விரிக்கிறார்கள். நீங்கள் நடந்து போகிறீர்கள். அங்கே காலில் குத்திய முள்ளை பாதியை ஒடித்து எறிந்து விட்டு வாழ்க்கையைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறார்கள் ஏழை மக்கள். அவர்களில் நீங்களும் ஒருவர் என்றால் நாங்கள் எப்படி நம்புவது.

 

book

 

வீராங்கன் அமைச்சரை பார்த்து

மக்களின் நிலை அறியாதவன் நானோ? நீங்களா? அமைச்சரே, நீங்கள் மாளிகையில் இருந்து மக்களைப் பார்க்கிறவர்கள். நான் மக்களோடு இருந்து மாளிகையை கவனிக்கிறவன். பெரிய இடத்தின் உள்ளே புகுந்ததால் என் உலகம் மாறியிருக்கிறது. என் உள்ளம் மாறவே இல்லை….

 

என்னை நம்பாமல் கெட்டவர்கள் நிறைய உண்டு. நம்பிக் கெட்டவர்கள் இன்று வரை இல்லை…

 

ராஜ சபை

ராஜகுரு – அப்படி என்றால் நாட்டில் பணக்காரர்கள் இருக்கமாட்டர்கள்.

 

வீராங்கன் – தவறு, பணக்காரர்கள் இருப்பார்கள், ஏழைகள் இருக்கமாட்டார்கள்.

 

வீராங்கன் மனோகரியை பார்த்து.

அரண்மனை, அதிகாரம், ஆள், அம்பு, சேனை, இதுதான் நீ காணும் உலகம், இன்னும் ஒரு உலகம் உண்டு, நீ காணாதது நான் கண்டது, கேள், காடு சுற்றுவார்கள், கலப்பை பிடிப்பார்கள், உழுவார்கள், விதைப்பார்கள், ஆறுப்பார்கள், சுமப்பார்கள் உண்ண மட்டும உணவில்லாமல் தவிப்பார்கள். அந்த மாபெரும் கூட்டத்திலே நானும் ஒருவன். படையினில் சேர்ந்தேன் மக்களுக்குப் பணி புரிய நாட்டைக் காக்க சேர்ந்த பின்பே அறிந்தேன், ஆற்ற வேண்டிய படை மக்களை அழ வைத்தது. வாழ வைக்க வேண்டிய படை மக்களை மாள வைத்தது என்று. உங்கள் ஆட்சியின் கொடுமைகள் அனைத்தையும் கண்டேன். ஆதரவற்று குடும்பங்கள் தவிப்பதையும் கண்டேன்…. அவர்களை அடிக்க சொல்வார் தளபதி அணைக்கத்தாவும் மனசாட்சி. உள்ளம் துடித்தது உதிரம் கொதித்தது. ஏனிப்பிடி? எதற்காக? நடக்கலாமா? சரிதானா? இவைகளை எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். ஒரே முடிவுக்கு தான் வந்தேன். மக்களிலே ஒருவன் தலைவனாகும் வரை மன்னராட்சியின் அக்கிரமத்துக்கு முடிவே இருக்காது என்று அறிந்தேன். படையில் இருந்து விலகினேன். புரட்சிக் கூட்டத்திலே புகுந்தேன்….

பாராளும் மன்னனாக பார்க்கிறாயே இப்போது, அவன் சிறையில் இருந்த போது பாராளுவோர் தந்த பரிசுகள் சவுக்கடி சூடு பார், சகோதரி பார்…. நான் கொடியவனாக இருந்திருந்தால் உன் கற்பை எளிதில் சூறையாடியிருக்க முடியும் இல்லை மனோகரி இல்லை நான் பலனளிக்கும் கழனி…

மனோகரி – நம்புகிறேன் அண்ணா நம்புகிறேன் நான் மட்டும் அல்ல இந்த நாடே உங்களை நம்பித்தான் ஆக வேண்டும்.

 

பிங்களன் – நீ உயிரோடு இருக்கும் வரையில் நான் வாழ இயலாது அப்படித்தானே?

வீராங்கன் – தவறு, நீதி உயிரோடு இருக்கும் வரை நீங்கள் அநியாயத்தை செய்ய முடியாது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

The cost of the book is Rs.100/-

The book can be purchased from leading book stalls and the branches of Kannadasan Pathipagam

Chennai – No.23, Kannadhasan Salai, T.Nagar, Chennai-17.

Coimbatore – No.1212, Range Gowder Street, Coimbatore – 641001.

Madurai – No.1, Annai Complex, III Street, Vasantha Nagar, Madurai – 625 003.

Puduchery – No.37, Bharathy Street, Puduchery – 605 001.

Vellore – No.32 & 33, Old Bus Stand, Municipal New shopping Complex, Ist Floor, Vellore – 632 004.

Or you can purchase the book through net via www.kannadasan.co.in

and their email : sales@kannadasan.co.in

Comments

Popular posts from this blog

Puratchi Thalaivar MGR

Manitha Punither MGR